• Apr 28 2024

விஜய் டிவி சீரியலில் புதிதாக இணைந்த ரச்சிதாவின் கணவர் தினேஷ்... அதுவும் எந்த சீரியல் தெரியுமா..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

ஆரம்ப காலத்தில் இருந்து சன் டிவிக்கு ஏராமான சீரியல்களை தனது ராடன் மீடியா மூலம் தயாரித்து கொடுத்து வந்தவர் நடிகை ராதிகா. இவ்வாறாக ராதிகா சீரியலுக்கும் சன் டிவிக்கும் அப்படி ஒரு பந்தம் அந்தக் காலத்தில் இருந்தே இருந்து வந்தது.

இதனையடுத்து தற்போது முதல் முறையாக ராதிகா விஜய் தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது 'கிழக்கு வாசல்' என்ற சீரியலை தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் தயாரித்து வரும் ராதிகா, அதன் ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவிக்கு வழங்கியுள்ளார்.


அந்தவகையில் இந்த சீரியலில் விஜய்யின் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர், பூவே பூச்சூடவா ரேஷ்மா, ராதிகா உள்ளிட்ட பலரும் நடிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது மற்றோர் நடிகரும் இந்த சீரியலில் புதிதாக இணைந்துள்ளார். அதாவது பிக்பாஸ் பிரபலமும், சீரியல் நடிகையுமான ரச்சிதாவின் கணவர் தினேஷ் தான் தற்போது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இணைந்துள்ளார். இந்த தொடரில் இவரின் நடிப்பினைக் காண்பதற்காக ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement