• Jan 15 2025

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் "ராயன்" மேக்கிங் வீடியோ !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

திரையில் நாயகனாகவும் திரைக்கு பின் இயக்குனராகவும் தனுஷ் களமிறங்கிய திரைப்படமான "ராயன்" இந்தாண்டு வெளியான அனைத்து திரைப்படங்களின் வசூலையும் தாண்டிய வசூலோடு திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது.கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் "ராயன்" தொடர்ந்தும் திரையரங்குகள் நிறையும் அளவில் பார்வையாளர்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

Raayan Movie Release in June ...

திரைப்படத்தின் இவ் வெற்றியை தொடர்ந்து படத்தின் முக்கிய பாடலை வெளியிட்ட படக்குழு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தி தொடர்ந்தும் ரசிகர்களை திரையரங்கு நோக்கி அழைத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூல் இயக்குனர் தனுஷிற்கான ஓர் அங்கீகாரத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.

RAAYAN - Water Packet Lyric Video ...

இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது "ராயன்" படக்குழு."ராயன்" திரைப்படத்தின் மேக்கிங் விடீயோவை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது தயாரிப்பு நிருவமான சன் பிக்சர்ஸ். சன் பிக்சர்ஸ் பகிர்ந்துள்ள இவ் ஆக்ஷன் காட்சிகளின் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement