• Apr 28 2024

பெரும் லாபத்தைக் கொடுத்த 'பத்து தல'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்திலும், சிம்பு நடிப்பிலும் உருவான 'பத்து தல' திரைப்படம் ஆனது சமீபத்தில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி இல்லை. இருப்பினும் முக்கிய கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன் எனப் பலரும் நடித்துள்ளனர்.


அத்தோடு இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கன்னட மொழியில் வெளியான Mufti என்ற படத்தின் ரீமேக்காக, இப்படமானது ரசிகர்களிடமிருந்து சிறந்த வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று இருக்கின்றது.


இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதிரடிக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது "பத்து தல திரைப்படம் சிம்புவின் கரியரில் அதிக வருவாயை ஈட்டிய ஒரு படமாக மட்டுமல்லாமல், எங்களின் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் லாபத்தை தந்திருக்கக் கூடிய படமாகவும் அமைந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement