ஹாலிவுட் திரையுலகில் இசை குடும்பமாக காணப்படும் இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனுக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் தான் பிரேம்ஜி.
தனது படிப்பை வெளிநாட்டில் பயின்ற பிரேம்ஜி, தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஞாபகம் வருதே என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து சில படங்களுக்கு இசையமைத்த போதிலும் அவருடைய சகோதரர் யுவன் சங்கர் ராஜா அளவுக்கு பிரபலமாகவில்லை. அதன் பின்பு கண்ட நாள் முதல், வல்லவன் படங்களில் ஒரு நடிகனாக நடித்திருந்தார்.
இதையெல்லாம் கடந்து இவருடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படம் தான் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதை தொடர்ந்து சப்தம் போடாதே, சந்தோஷ் சுப்பிரமணியன், சத்தியம், கோவா,சிலம்பாட்டம், சரோஜா, மங்காத்தா போன்ற படங்களை காமெடி ரோலில் நடித்திருந்தார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் முக்கிய ரோலில் பிரேம்ஜி நடித்து வருகின்றார். அத்துடன் 45 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் பிரேம்ஜிக்கு திருமணம் எப்போது என்ற கேள்வி பல நாட்களாக காணப்பட்டது. இறுதி அதற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
அந்த வகையில் இன்றைய தினம் பிரேம்ஜியின் திருமணம் மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் தமது குடும்ப முறைப்படி இந்துவுக்கு தாலியைக் கட்டி தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு நெற்றியில் முத்தமும் கொடுத்துள்ளார்.
இவரது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள். ஆனாலும் விரைவில் சென்னையில் இவர்களது திருமண ரிசப்ஷன் நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலான நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!