• Mar 19 2024

அந்தப் படத்திற்கு ஆஸ்கார் வேணுமாம்... காறித் துப்பியும் புத்தி வரல.. பிரபல இயக்குநரை சாடிய பிரகாஷ் ராஜ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தன்னுடைய சிறந்த நடிப்பின் வாயிலாக தமிழ் சினிமாவையே கட்டிப் போட்ட ஒருவரே நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் ஹீரோ, வில்லன் உட்பட பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி இருக்கின்றார். இவ்வாறு சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், டுவிட்டரில் அரசியல் தொடர்பான தனது கருத்துக்களையும் துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்து வருகிறார். 


அதிலும் குறிப்பாக பாஜக-விற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்த வண்ணம் தான் இருக்கின்றார். மேலும் சமீபத்தில் பதான் படத்தில் தீபிகா படுகோன் அணிந்திருந்த பிகினி காட்சிக்கு பாஜகவின் எதிர்ப்பு தெரிவித்ததை கடுமையாக விமர்சித்தும் பேசி இருந்தார் பிரகாஷ் ராஜ்.


இந்நிலையில் தான் பிரகாஷ் ராஜ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் காஷ்மீர் பைல்ஸ் மற்றும் பதான் படங்கள் குறித்து வெளிப்படையாக தன்னுடைய கருத்தினைப் பேசி உள்ளார். அதாவது அதில் அவர் கூறுகையில் "பதான் படத்தை தடை செய்ய விரும்பினார்கள். ஆனால் அப்படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை எதிர்த்தவர்களால், மோடியின் பயோபிக் படமான பிஎம் நரேந்திர மோடி என்கிற திரைப்படத்திற்கு ரூ.30 கோடி கூட கலெக்‌ஷனை பெற முடியவில்லை" எனக் கூறியிருக்கின்றார்.


மேலும் "அதேபோல் காஷ்மீர் பைல்ஸ் என்கிற பிரச்சார படம் ஒன்றை எடுத்து வெளியிட்டனர். அந்த படத்தை பார்த்த சர்வதேச கலைஞர்கள் காறித் துப்பினர். அப்படி இருந்தும் இவர்களுக்கு புத்தி வரவில்லை. இதில் காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு ஆஸ்கர் கொடுக்கவில்லை என அதன் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி கவலைபட்டாராம். இந்த மாதிரி படத்துக்கெல்லாம் ஆஸ்கர் இல்ல பாஸ்கர் விருது கூட கிடைக்காது" என பிரகாஷ் ராஜ் தனது பாணியில் சாடி உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement