• Feb 21 2025

பல வேஷங்களில் நடிக்கப் பிடிக்காது... பிரதீப் ரங்கநாதன் அதிரடிக் கருத்து!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் "லவ் டுடே" போன்ற மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், சமீபத்தில் ஒரு நேர்காணலில் தன் சினிமா பற்றிய பார்வைகளை பகிர்ந்து கொண்டார். நடிகராகவும், இயக்குநராகவும் ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை செய்துவரும் பிரதீப் ரங்கநாதன், "எனக்கு படத்தில் கொண்டாட்டங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் பல வேஷங்கள் போட்டு நடிக்க வேண்டும் என்றால், அதற்காக மிகுந்த ஆர்வம் இருக்காது "என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, "என்னுடைய படத்தைக் காணும் போது ரசிகர்கள் தியேட்டரில் சந்தோஷமாக கத்துவது, கொண்டாட்டத்தில் ஈடுபடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் தருகிறது " என்றார். அத்துடன் இதன்மூலம், அவருடைய சினிமா அனுபவம் மற்றும் ரசிகர்களின் மீது அவர் மிகுந்த உற்சாகம் கொண்டிருப்பதை காணலாம்.


அத்துடன் படம் வெற்றிபெற, அது விற்பனையாகும் தரத்திலிருப்பது முக்கியமான அம்சமாக இருப்பதாக பிரதீப் கூறினார். குறிப்பாக "படம் entertaining ஆக இருக்குதோ என்று பார்ப்பேன். அதோட விற்க கூடியதாக இருக்குதோ என்பதையும் கவனிப்பேன் "எனத் தெரிவித்தார்.

அத்துடன், அனுபமா பரமேஸ்வரன் குறித்தும்  சில நெகிழ்ச்சியான கருத்துகளை கூறியுள்ளார். பிரதீப் அதில், "அனுபமாவின்  நடிப்பு மற்றும் அவரது கதாபாத்திரம் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது "என்றார். மேலும் நடிகை சினேகா அவரின் சிறந்த நடிப்புக்காக பலராலும் பாராட்டப்படுபவர். ஆனால், பிரதீப் ரங்கநாதன் அவரை தனிப்பட்ட முறையில் அதிகம் ரசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement