தமிழ் திரைப்பட உலகில் மற்றுமொரு பிரமாண்டமான வாழ்க்கை வரலாறு திரைப்படம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் நடிகர் மாதவன், கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் 'G.D.N' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் இந்தியாவின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான 'ஜிடி நாயுடு' அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.
ஜிடி நாயுடு, பொறியியல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற ஒருவர். அவர் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு மிகுந்த பங்களிப்பு செய்தவர். அவரை பலரும் "இந்தியாவின் எடிசன்" என்று அழைத்தனர்.
இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மாதவன் முக்கியமான நாயகனாக நடிக்கிறார். அவரின் முந்தைய வாழ்க்கை வரலாறு படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டது அதனைப் போலவே இந்த படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளதாக கூறுகின்றார்கள்.
தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதவன் படத்தில் ஜிடி நாயுடுவாக காட்சியளிக்கிறார். இது குறித்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் அனைவரும் மாதவனின் திரைமுகம், அவரது கதாபாத்திரத் தோற்றம் மற்றும் G.D. Naidu வாழ்க்கையை கதையாக உருவாக்கும் முயற்சி குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
Listen News!