கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி பாடகர், இசை அமைப்பாளர் என பல முகங்களை கொண்டு திகழ்ந்து வருகின்றார். இவர் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் நடித்திருப்பார்.
இதைத்தொடர்ந்து இயக்குநர் கருப்பையா முருகன் இயக்கும் வல்லமை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இந்த படத்தில் தீபா சங்கர், திவ்ய தர்ஷினி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஜி கே வி இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் வல்லமை படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை இயக்குநர்கள் ஆன வெங்கட் பிரபு, சீனு ராமசாமி, லிங்குசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த படத்தில் கதாநாயகனாக பிரேம்ஜி களம் இறங்கி உள்ளதினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படம் கூடிய விரைவிலேயே ரிலீஸ் ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!