• Apr 26 2024

பத்து தல படத்திலிருந்து புதிய அப்டேட்டை வெளியிட்ட பிரபல தயாரிப்பு நிறுவனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தின் ரீமேக் தான் பத்து தல. இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சிம்பு நடித்து வருகின்றார்.இப்படத்தை இயக்குநர் ஞானவேல் ராஜா இயக்கி வருகின்றார்.இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் கௌதம் மேனனும் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது சில நாட்கள் மற்றுமே நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன.

சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிம்பு சம்மந்தப்பட்ட காட்சிகள் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படமாக்கப்பட்டு வந்தன.

மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரியா பவானி சங்கரும், கவிஞர் மனுஷ்யபுத்திரனும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து இப்போது கர்நாடக படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்டியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement