• Apr 24 2024

ரஜினிகாந்தை யாருக்கு தான் பிடிக்காது- ஜப்பான் இளைஞன் கூறிய சுவாரஸியமான தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சர்வதேச அளவில் ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு தற்பொழுது 70 வயதைத் தாண்டி உள்ள நிலையிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகியிருந்து.

இதனைத் தொடர்ந்து தனது 169வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகின்றார். மேலும் அண்மையில் ஜப்பானை சேர்ந்த ஒரு ரசிகரிடம் அவருக்கு பிடித்த ரஜினி படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் முத்துதான் தனக்கு பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் தனக்கு பிரபுதேவா மற்றும் குஷ்பூவையும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தான் இறுதியாக விஜய் படத்தைதான் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து நெதர்லாந்து, பிரான்ஸ் என பல நாடுகளுக்கு சென்றாலும் தனக்கு இந்தியாதான் மனதிற்கு நெருக்கமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement