• Jan 15 2025

"சர்தார் -2" இல் இணைகிறார் பிரபல கன்னட நட்சத்திரம்,வெளியான புதிய அறிவிப்பு !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

கடந்த 2022 ஆம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தியின் மிரட்டலான இரட்டை வேட நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி எதிர்பார்ப்பை தாண்டிய வெற்றியை கொடுத்தது "சர்தார்" திரைப்படம். படத்தின் வெற்றியை தொடர்ந்து "சர்தார் -2" நிச்சயம் என அறிவிக்கப்பட்டது.

Sardar 2 begins : r/kollywood

யாரும் எதிர்பாரா விதமாய் வெளிவந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்தது.கடந்த ஜூலை 12 பூஜையுடன் 15 ஆம் தேதி சென்னையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் ஆரம்பமானது படப்பிடிப்பு வேலைகள். கார்த்தியை தவிர ஏனைய நடிகர்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியிட்ட படக்குழு   கடந்த 2 ஆம் திகதி படக்குழுவில் 'மாளவிகா மோகனனை' வரவேற்றது.

படம்

இந்நிலையில் "சர்தார் -2" இல் பிரபல கன்னட நட்சத்திரம் நடிகை ஆஷிகா ரங்கநாத் இணைத்துள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கன்னட திரைப்படங்களில் தோன்றும் ஆஷிகா 2021 இல் வெளியான 'மதகஜா' படத்திற்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement