• Sep 20 2024

பூர்ணிமாவுக்கு முதுகில் குத்திய மாயா? ஒரு செக்கனில் தலைகீழாக மாறிய ஆட்டம்!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, இந்த வாரத்தலைவராக நிக்சன் இருக்கின்றார். எனவே லிவிங் ஏரியாவில் ஒரு மணி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் தங்களுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என யாராவது நினைத்தால் அந்த மணியை அடிக்கலாம் என கூறப்பட்டது.

தற்போது வெளியான ப்ரோமோவில், ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜோவிகா, விசித்ரா, நிக்சன் ஆகியோர் விக்ரமை நாமினேஷன் செய்கின்றனர்.


அர்ச்சனா, பூர்ணிமா இருவரும் அனன்யாவுக்கு நாமினேஷன் செய்கின்றனர். அடுத்து அனன்யா, மாயா ஆகிய இருவரும் பூர்ணிமாவை நாமினேட் செய்கின்றனர்.

இவ்வாறு மாயா பூர்ணிமாவை நாமினேட் செய்ததோடு மட்டும் இல்லாமல், ஒன்னு நான் இருக்கனும் இல்ல அவங்க இருக்கணும் என சொல்லுகிறார். இதை தொடர்ந்து பூர்ணிமா அழுவது போல காட்டப்படுகிறது.


Advertisement

Advertisement