"கண்ணப்பா" திரைப்படம் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் மோகன் பாபு தயாரிப்பில் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ளது. இத் திரைப்படம் ஜூன் 27ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் ட்ரைவ் காணாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவபக்தரான கண்ணப்பாவின் புராணக்கதையை அடிப்படையாகக் கொண்டே இந்த திரைப்படத்தினை இயக்கியுள்ளனர். இந்தப் படத்தில் விஷ்ணு மஞ்சு ஹீரோவாகவும் மோகன் பாபு, ஆர். சரத்குமார், அர்பித் ரங்கா, கௌஷல் மந்தா, ராகுல் மாதவ், தேவராஜ், முகேஷ் ரிஷி, பிரம்மானந்தம், ரகு பாபு, பிரீத்தி முகுந்தன் மற்றும் மது ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார்,காஜல் அகர்வால் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு செம்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் மாதம் திரையரங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் முக்கிய வீடியோக்காட்சிகள் அடங்கிய ஹார்ட் ட்ரைவ் காணாமல் போய் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் மும்பையை சேர்ந்த VFX நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட ஹார்ட் ட்ரைவுடன் சரிதா என்ற தயாரிப்பு நிறுவன ஊழியர் தலைமறைவானதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் தெலுங்கானாபொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!