குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார்.
குவைத் உள்துறை அமைச்சர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கட்டட உரிமையாளர்களின் பேராசையே இந்த சம்பவத்திற்கு காரணம்” என குறிப்பிட்டார்.இந்த கட்டடத்தில் அளவுக்கு அதிகமான மக்கள், கடும் நெருக்கடியில் வசித்து வந்துள்ளனர். குடியிருப்பில் உள்ள சட்ட மீறல்களே விபத்திற்கு காரணம் என குவைத் ஊடக அறிக்கை சொல்கிறது.
இது தொடர்பாக உலகெங்கும் இருந்து பலர் கண்டனங்களையும் இறந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.அவ் வரிசையில் தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியரான கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் கவிதையொன்றை பதிவேற்றியுள்ளார்.
குவைத்தின் தீ விபத்தில்
மனிதச் சதைகள்
கருகிய வாசம்
உலகக் காற்றில் வீசுகிறது
இறந்த பின்தான்
தகனம் செய்வார்கள்;
தகனம் செய்து
இறப்பைத் தந்திருக்கிறது
நெருப்பு
இதயத்தின்
மெல்லிய தசைகள்
மெழுகாய் உருகுகின்றன
உலகம்
தோன்றிய நாளிலிருந்து
விபத்துகள் புதியனவல்ல
விஞ்ஞானம் வளர்ந்தபின்னும்…
Listen News!