• Jun 23 2024

பூங்கொத்தோடு துணைப்பெண்ணாக நின்ற கீர்த்தி சுரேஷ்,உங்களுக்கு எப்போ ? ரசிகர்கள் கேள்வி !

Thisnugan / 1 week ago

Advertisement

Listen News!

கீர்த்தி சுரேஷ் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜி.சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா ஜி.சுரேஷ் ஆகியோரின் மகள் ஆவார்.திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இன்று தமிழ்,மலையாளம்,தெலுங்கு என இந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Keerthy Suresh tests positive for Covid-19, promises to be back in action  soon - India Today

ஒரு தேசிய திரைப்பட விருது , நான்கு SIIMA விருதுகள் மற்றும் ஒரு பிலிம்பேர் விருது,தென்னக விருதுகள் என  பல்வேறு பாராட்டுகளைப் பெற்ற கீர்த்தி சுரேஷ் தமிழில் அறிமுகமான இது என்ன மாயம் படத்திற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான SIIMA விருதை வென்றார்.

Keerthy Suresh: From Costume Designer ...

30 வயதை கடந்திருந்தும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இதுவரை திருமணம் செய்யாதிருக்கிறார்.அண்மையில் நடைபெற்ற ஸ்ருதி.ஜே.ஸ்காரியாவின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் துணை பெண்ணாக மேடையை அலங்கரித்தார். அப் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷை உங்களுக்கு எப்போன்னு கேள்வி கேட்டு கமெண்ட்டை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.


Advertisement

Advertisement