• Jan 19 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 'கதிர்' கேரக்டரை முதலில் உதறித்தள்ளிய விஜய் டிவி பிரபலம் யாரு தெரியுமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதலாவது சீசன் அண்ணன் தம்பிகளை வைத்து எடுக்கப்பட்ட நிலையில், அதன் இரண்டாம் பாகம் அப்பாவுக்கும் மகன்களுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை எடுத்துக் காட்டுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின் முத்து, பாண்டியன் கேரக்டரிலும், அவரது மனைவி கேரக்டரில் நடிகை நிரோஷாவும் நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் ஆகாஷ் பிரேம்குமார், கதிர்வேல் கந்தசாமி, வசந்த், ஹேமா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தற்போது இதன் கதைக்களம் சரவணன்- தங்கமயிலுக்கு திருமணம் நடக்கும் நிலையிலும், தங்கமயில் குடும்பம் பாண்டியன் குடும்பத்தை ஏமாற்றி சம்பந்தம் செய்த நிலையிலும் நகர்கிறது.


இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பாகத்தில் தற்போது கதிர் பாத்திரத்தில் ஆகாஷ் நடித்து வரும் நிலையில், அதில் ஏற்கனவே விஜய் டிவி பிரபலம் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.

அதாவது, கதிர் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நவீன் தானாம். அதற்கு பிறகு தான் இந்த சீரியலில் நடிக்க ஆகாஷ் கமிட்டாகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement