• Jan 19 2025

யாரும் எதிர்பாரா தோற்றத்தில் வெளியான 'நிறம் மாறும் உலகில்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குனர் பிரிட்டோ JB  இயக்கத்தில், இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா மற்றும் ரியோராஜ், சாண்டி, நட்டி  ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் 'நிலை மாறும் உலகில்'. இந்த படத்தை Signature Productionz மற்றும் ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படம் நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகளை இணைக்கும் ஒரு புள்ளி என நம் வாழ்வின் உறவுகள் அவசியத்தையும், உணர்வுகளை பேசும் அழகான கமர்சியல் படமாகவும் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித், ஐஸ்வர்யா ராஜேஷ்,  லைகா நிறுவன நிர்வாக இயக்குநர் GKM தமிழ் குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.


குறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது குருதிப் பாயும் சிவப்பு நிற பின்னணியில் இருப்பதோடு அதில் துப்பாக்கி, ஆட்டோ, கண்ணாடி,  ஒரு பெண்ணின் நிழல் முகம் என பல குறியீடுகளோடு  காணப்படுகின்றது.

மேலும் பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி என ஒவ்வொருவரின் தோற்றமும் இதுவரையில் பார்த்திராத வகையில் உள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Advertisement

Advertisement