• Apr 28 2024

குளத்திற்குள் தாறுமாறாக போஸ் கொடுத்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பிரபலம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சுஜிதா தனுஷ். இவர் பாக்யராஜ் இயக்கிய 'முந்தானை முடிச்சி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து அசத்தி உள்ளார். 


அதுமட்டுமன்றி தற்போது தமிழின் பிஸியான சின்னத்திரை நடிகையாக திகழ்கிறார். அதாவது 'ஆனந்தம்' படத்தின் சீரியல் வெர்ஷன் என பலராலும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் கலாய்க்கப்பட்டு வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. 


இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதில் மூர்த்தி தம்பிகளுக்கு தனம் அண்ணியாகவும், அவர்களின் மனைவிகளுக்கு அக்காவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வழி நடத்தும் பாசமான மனைவியாக நடித்து வருபவர் சுஜிதா தனுஷ்.


சீரியல் நடிப்பு மட்டுமல்லாமல், விளம்பர படங்கள் இயக்குவது யூடியூப் சேனலில் குழந்தைகளுக்கு தேவையான கதைகள் சொல்வது என சுஜிதா எப்போதும் பிஸியாக இருந்து வருகிறார். அத்தோடு சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார். 


அதில் ஓய்வு நேரங்களில் நடக்கும் ஜாலியான நிகழ்வுகள் தொடர்பான தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது தோழிகளுடன் இணைந்து சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு இருக்கின்றார்.


அதில் குளத்திற்குள் நின்று ஜாலியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். இப்புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement