• Jan 19 2025

தங்க மயிலுக்கு சேலை எடுக்க போன பாண்டியன் குடும்பம்.. அச்சச்சோ முக்கியமான ஒன்னை மறந்துட்டாங்களே..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று சரவணன் தங்கமயில் நிச்சயதார்த்தத்திற்கு சேலை எடுக்க பாண்டியன் குடும்பம் சென்ற நிலையில் ஒரு முக்கியமானதை மறந்து விட்டேன் என்று கோமதி இன்றைய எபிசோடின் கடைசியில் கூறியிருப்பது காமெடியின் உச்சத்தில் உள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கடந்த சில நாட்களாக சரவணனுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்தது என்பதும் ஒரு வழியாக தங்கமயில் என்ற பெண்ணை பேசி முடித்து நிச்சயதார்த்தம் வரை கொண்டு வந்து விட்டார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மொட்டை மாடியில் சரவணன் தனது தம்பிகளுடன் படுத்திருக்க அவர்களுடன் அவரது மாமாவும் இருக்கும் நிலையில், அனைவரும் தங்கமயில் குறித்து பேசுகின்றனர். சரவணன் தூங்கி விட்டது போல் நடிக்க, அப்போது அவரது தம்பி, சரவணன் போனை எடுத்து தங்க மயிலுக்கு ’ஹாய்’ என்று மெசேஜ் அனுப்ப அந்த மெசேஜை பார்த்து தங்கமயிலும் பதிலுக்கு மெசேஜ் அனுப்ப ஒரே காமெடியாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே சரவணனின் மாமா தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று புலம்பும் காட்சிகளும் உள்ளது.



இதனை அடுத்து பாண்டியன் தனது குடும்பத்தினரிடம் தங்க மயிலுக்கு சேலை எடுக்க வேண்டும் என்று கூற அனைவரும் ஜவுளி கடைக்கு செல்லலாம் என்று கிளம்புகின்றனர். ஆனால் மீனா தனக்கு ஆபீஸில் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது, அதனால் நீங்கள் போய்விட்டு வாருங்கள் என்று கூற, அது எப்படி நீ இல்லாமல் சேலை எடுக்க முடியும், நீயும் கண்டிப்பாக வரவேண்டும், ஆபீசுக்கு லீவு போடு’ என்று பாண்டியன் கூறுகிறார்.

 இந்த நிலையில் சரவணன் தங்கை நானும் வருகிறேன் என்று சொல்ல ’நீ காலேஜுக்கு போக வேண்டாமா? நீ வேண்டாம் என்று கூறுகிறார். அதன் பின்னர் சில குழப்பங்களுக்கு பிறகு அனைவரும் ஜவுளி கடைக்கு சேலை எடுக்க செல்கின்றனர். அங்கு பாண்டியன் ஒரு ஓரமாக உட்கார்ந்து இருக்க, ஜவுளி கடையில் உள்ள அனைத்து சேலைகளையும் ஒட்டுமொத்த பாண்டியன் வீட்டு பெண்கள் புரட்டி புரட்டி பார்க்கும் காட்சிகள், இந்த சேலை சரியில்லை, அந்த சேலை சரியில்லை என்று ஒவ்வொருவராக ஒவ்வொரு கருத்து கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கடைசியில் ஒரு சேலை அனைவருக்கும் பிடித்து போக, இது என்ன விலை? என்று கோமதி கேட்க, கடைக்கார பெண் 8500 ரூபாய் என்று சொல்கிறார். இவ்வளவு விலையா? அவ்வளவு விலைக்கு வேண்டாம் என்று கோமதி சொல்ல, எவ்வளவு தான் உங்கள் பட்ஜெட், அதை முதலில் சொல்லுங்க, அப்ப தான் சேலை செலக்ட் செய்ய முடியும் என்று மீனா கேட்கிறார். அச்சச்சோ அதை கேட்க மறந்து விட்டேனே, நான் போய் கேட்டு வருகிறேன் என்று கோமதி கூறும் காட்சியுடன் இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் தற்போது காமெடியாகவே சென்று கொண்டிருக்கும் நிலையில் விரைவில் ஒரு திருப்பம் ஏற்பட்டு சீரியஸ் ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement