• Jun 23 2024

ஒரு வாரத்துக்கு அரிசி வாங்கியிருக்கலாமே.. 1200 ரூபாய் போச்சே.. புலம்பிய கோமதி.. கிண்டல் செய்யும் மீனா-ராஜி..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் இன்று சரவணன் மற்றும் தங்கமயிலை எங்கேயாவது வெளியே அனுப்பலாமே என்று பாக்கியம் கூற, அதற்கு கோயிலுக்கு சென்று வாருங்கள் என்று பாண்டியன் கூறுகிறார். அப்போது கோமதி சின்னஞ்சிறுசுகள் கோவிலுக்கு செல்லலாமா? தியேட்டருக்கு அல்லது வேறு எங்கேயாவது செல்லட்டும் என்று கூற, உடனே தியேட்டருக்கு படம் பார்க்க செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

தான் சின்ன வயதில் இருந்து படமே பார்த்ததில்லை என்றும், சின்ன வயதில் சாமி படம் மட்டுமே பார்த்தது உண்டு என்று தங்கமயில் கூற உடனே தியேட்டருக்கு செல்ல பாண்டியன் டிக்கெட் எடுத்து தருகிறேன் என்று கூறினார். அதெல்லாம் வேண்டாம் ஆன்லைனில் புக் செய்கிறேன் என்று கூறி பாண்டியனின் செல்போனை வாங்கி ஆன்லைனில் புக் செய்த நிலையில் 1200 ரூபாய் என்று மெசேஜ் வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியன் இரண்டு பேர் தியேட்டருக்கு செல்ல 1200 ரூபாயா? என்று அதிர்ச்சி அடைய அப்போது தங்கமயில் கூறிய விளக்கத்தை கேட்டு அவர் இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.



இந்த நிலையில் மீனா ’சின்ன வயதில் இருந்து படமே பார்த்ததில்லை என்று கூறினார், ஆனால் இப்போது தியேட்டருக்கு புக் செய்ய ஆப் வந்தது என்று ராஜியிடம் கூற அதற்கு ராஜி கிண்டலாக ஒரு பதிலை சொல்கிறார். இதனை அடுத்து 1200  ரூபாய் போச்சு என பாண்டியன் புலம்பி கொண்டு இருக்கிறார்.

பாண்டியன் மட்டுமின்றி கோமதியும் சமையலறையில் ’1200 ரூபாய்க்கு எங்க காலத்தில் அரை பவுன் நகை வாங்கி இருப்போம், ஒரு வாரத்துக்கு அரிசி வாங்கி இருப்போம்’ என்று புலம்ப மீனா, ராஜி ஆகிய இருவரும் அவரை கிண்டல் செய்து ’போகட்டும் விடுங்கள், ஒரு நாள் தானே’ என்று சமாதானப்படுத்துகின்றனர். அப்படியும் சமாதானம் ஆகாமல் கோமதி புலம்பிக்கொண்டே இருக்கும் காட்சிகள் உள்ளன.

இதனை அடுத்து சரவணன் மற்றும் தங்கமயில் அறையில் ஒரு சின்ன ரொமான்ஸ் காட்சி நடைபெறுகிறது. அதன் பிறகு இருவரும் படத்திற்கு கிளம்பும் போது மீனாவிடம் ’நாங்கள் வந்த பின்னர் நீங்கள் சென்னைக்கு போங்கள், நான் உங்களுக்கு எல்லாம் ஏற்பாடுகளும் செய்து தருகிறேன், என்று சொல்ல ’பரவாயில்லை நாங்கள் என்ன ஊரை காலி செய்துவிட்டா செல்கிறோம், நீங்கள் மெதுவாக படம் பார்த்துட்டு வாங்க, நான் செல்கிறேன்’ என்று கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement