• Jan 19 2025

எம்பிஏ படிப்பு.. ஐடி கம்பெனி வேலை.. கை நிறைய சம்பளம்.. ‘பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு இப்படி ஒரு பின்னணியா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் நாயகி ஆக நடித்த ரோஷினி சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னை பற்றி பலரும் அறியாத தகவல்களை கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோஷினி எம்பிஏ படித்துவிட்டு அதன் பின்னர் ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தனக்கு சீரியல், சினிமாவில் நடிக்கும் எண்ணம் என்பது கனவில் கூட இல்லை என்றும் ஆனால் தன்னுடைய பயணம் எதிர்பாராமல் நடந்தது என்றும் கூறியுள்ளார்.

படித்து முடித்து ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பகுதி நேரமாக மாடலிங் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது ஃபோட்டோஷூட் செய்து கொண்டிருந்தபோதுதான் ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்க வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் முதலில் ஒன்லைன் ஸ்டோரியை கேட்டு நான் ஆச்சரியம் அடைந்து அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றும்  கூறினார்.



’பாரதி கண்ணம்மா’ சீரியலில் நான் நடந்து போகிற சீனுக்கு இவ்வளவு மீம்ஸ், ட்ரோல் வந்ததை நான் ஜாலியாக எடுத்துக் கொண்டேன் என்றும் அவர் கூறினார். மேலும் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது நான் பல பெண்களை சந்தித்தேன் என்றும் அப்போது இந்த சீரியலில் உள்ள உங்கள் கேரக்டரை போல தான் நாங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பலர் கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

அதேபோல் ’கருடன்’ படத்தின் அங்கயற்கண்ணி கேரக்டரும் எனக்கு வித்தியாசமாக இருந்தது என்றும் இயக்குனர் துரை செந்தில்குமார் அந்த கேரக்டருக்கு என்னை தேர்வு செய்ததுக்காக கூறிய காரணத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன் என்றும் கூறினார்.

தற்போது இரண்டு திரைப்படங்களில் அவர் நடித்து வருவதாகவும் இரண்டுமே ஃபேமிலி சென்டிமென்ட் கதை அம்சம் கொண்டது என்றும் மிடில் கிளாஸ் ஃபேமிலி சப்ஜெக்ட் என்பதால் ரசித்து நடிக்கிறேன் என்றும் கூறினார். மேலும் காமெடி சீரியலில் நடிக்க வேண்டும் என்று எனக்கு பல நாள் ஆசை என்றும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement