• Jun 28 2024

பீச்சில் ரொமான்ஸ் செய்யும் செந்தில் - மீனா.. மீண்டும் தங்கமயில் வைத்த ஆப்பு..!

Sivalingam / 4 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் செந்திலுக்கு மேலும் சில வேலைகளை கொடுத்து, காத்திருந்து அதை முடித்துவிட்டு தான் வரவேண்டும் என்று கூறுகிறார். இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளாகும் செந்தில், மனைவி மீனா காத்திருப்பாரே என்று வருத்தம் அடைகிறார். அப்போது அவர் கதிருக்கு போன் செய்தபோது கதிர் சில ஐடியாக்களை கொடுக்கிறார்.

இதையடுத்து நீண்ட நேரம் காத்திருந்து பாண்டியன் கொடுத்த வேலையை முடித்துவிட்டு செந்தில், ஓட்டல் அறைக்கு வரும் போது மீனா கோபம் அடைகிறார். மீனாவை சமாதானப்படுத்தும் செந்தில், பீச்சுக்கு போகலாம் என்று கூற, முதலில் மறுக்கும் மீனா, அதன் பிறகு சம்மதித்ததால் இருவரும் பீச்சுக்கு செல்கின்றனர்.

பீச்சில் ரொமான்ஸ் காட்சிகள் நடைபெற்ற போது ஐஸ் கிரீம் வாங்கி வரும் செந்தில், அதை ஒரு காதலிக்கு காதலன் ப்ரொபோஸ் செய்வது போல் கொடுக்க, மீனா மகிழ்ச்சி அடைகிறார். இந்த நேரம் இடையிடையே பாண்டியன் செந்திலுக்கு போன் செய்ய, ஒரு கட்டத்தில் செந்தில் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார்.



இந்த நிலையில் செந்திலுடன் ஜாலியாக இருக்கும் மீனா புகைப்படங்கள் எடுத்து ராஜிக்கு அனுப்புகிறார். அப்போது செந்தில் ’அப்பாவிடம் ராஜி காண்பித்து விட்டால்  பிரச்சினையாகி விடும்’ என்று சொல்ல, ’அதெல்லாம் காண்பிக்க மாட்டாள் ராஜி’ என்று மீனா சமாதானம் கூறுகிறார்.

இந்த நிலையில் போட்டோக்களை பார்த்த ராஜி, சந்தோஷம் அடைந்து, அதை அத்தை கோமதி இடமும் அரசிடமும் காண்பிக்க மூவரும் இது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் தங்கமயில் போட்டோக்களை பார்த்து நன்றாக இருக்கிறது என்று வேண்டாம் வெறுப்பாக கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

நாளைய எபிசோடில் செந்தில், மீனா போன் செய்யவில்லையே என்று பாண்டியன் கோமதியிடம் கேட்க அப்போது முந்திரிக்கொட்டை மாதிரி தங்கமயில் ’போன் செய்யவில்லை, ஆனால் பீச்சில் இருக்கும் போட்டோ அனுப்பினார்கள் என்று நைசாக ஆப்பு வைக்க அப்போது பாண்டியன் முகம் இறுக்கமாகிறது.

Advertisement

Advertisement