• Jan 19 2025

விஸ்வரூபமாகிய ரூம் பிரச்சினை.. முட்டி மோதிய வாரிசுகள்! அண்ணாமலை எடுத்த முடிவு

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா வீட்டுக்கு வரும்போது ரவி, மனோஜ், முத்து மூன்று பேரும் தமது பொண்டாட்டிகளை தூக்கிக்கொண்டு சுத்திக்கொண்டிருக்க பார்த்து கடுப்பாகிறார்.

மேலும் உள்ளே வந்து நிறுத்துங்கள் என சொல்லி, இது உன் ஐடியாவா என மீனாவுக்கு திட்ட, ஸ்ருதி நாங்க தான் ஸ்டார்ட் பண்ணினோம் என சொல்லுகிறார். மேலும் ரோகிணியிடம் எனக்கு பிறகு நீ தானே வீட்டை பார்த்துக் கொள்ளனும் என சொல்ல, ரோகிணியும் ஒரு மாதிரி சமாளிக்கிறார்.

இதன்போது இதெல்லாம் ரூமுக்குள்ள வச்சு பண்ண வேண்டியதுதானே என கேட்க, எங்களுக்கு தான் இல்லையே என முத்து சொல்லுகிறார். 

இதை தொடர்ந்து அண்ணாமலை ஒரு கொப்பியை எடுத்து வீட்டுக்கு அவ்வளவு தரப் போறீங்க என மூன்று பேரிடம் கேட்க, ரோகினி ஐந்து விரல்களை சைலண்டாக காட்ட மனோஜ் அதை பார்த்துட்டு மூன்று என்று சொல்லுகிறார், இதை கவனித்த முத்து அவ எட்டு விரல் காட்டுறாங்க என்று நோண்டி ஆக்குகிறார். இதனால் தான் 8000 தருவதாக மனோஜ் சொல்லுகிறார்.


இதற்கு பிறகு முத்து மீனாவிடம் நீயும் விரல்களை காட்டு என சொல்ல அவர் 10 விரல்களை காட்டுகிறார். இதனால் தான் பத்தாயிரம் தருவதாக முத்து சொல்லுகிறார். ரவியும் 10,000 தருவதாக சொல்லுகிறார்.

அதன் பின்பு மீனா தானும் உழைக்கிறேன் அதனால் 2000 தருவதாக  சொல்ல, உடனே ரோகினி 5000 தருவதாக சொல்லுகிறார், ஸ்ருதி பத்தாயிரம் தருவதாக சொல்லுகிறார்.

இதன் போது விஜயா என்னத்துக்கு என்று கேட்க, அது நேரம் வரும்போது சொல்கிறேன் என அண்ணாமலை சொல்லிச் செல்கிறார்.

இதை தொடர்ந்து முத்து, மனோஜ், ரவி மூவரும் மொட்டை மாடியில் நின்று அப்பா எதுக்கு காசு கேட்டிருப்பார்  என யோசித்துக் கொண்டிருக்க, மனோஜ் அம்மா அப்பா தனியா போக போறாங்க, இல்ல அப்பார்ட்மெண்ட் வாங்கப் போறாங்க என்பது போல பேச முத்து கோவப்படுகிறார். மேலும் நான் இருக்க மட்டும் எல்லாரும் இங்கதான் இருக்கணும். அம்மா அப்பா தனிச்சு போக விட மாட்டேன் என சொல்லுகிறார்.

ஆனாலும் மனோஜ் நான் தொழிலதிபர் அதனால் இப்படியே  இருக்க முடியாது. வேற வீடு வாங்கி போவேன் என்பது போல  சொல்லி, நீ கார் டிரைவர் அப்படி என்று முத்துவையும் மீனாவையும் பற்றி தரக்குறைவாக பேசுகிறார்.இதன் போது இருவருக்கும் சண்டை ஏற்பட ரவி தடுத்து வைக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement