• Jan 19 2025

கதிர் வாங்கி கொடுத்த டிரஸ்.. வருத்தத்தில் ராஜி.. தங்கமயிலை சீண்டிய மீனா.. நடுரோட்டில் ரொமான்ஸ்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் வாங்கி கொடுத்த டிரஸ்ஸை ராஜி அணிந்து கொண்டு மீனா மற்றும் கோமதியிடம் காண்பிக்க இருவரும் சந்தோஷம் அடைகின்றனர். எனக்காக என் கணவர் முதல் முதலாக வாங்கி கொடுத்த டிரஸ் என்று ராஜி பெருமையாக கூறும் போது அங்கே தங்கமயில் வருகிறார்.
 
தங்கமயில் வந்தவுடன் மூவரும் பேச்சை நிறுத்தி விட, எதற்காக பேச்சை நிறுத்தி விடுகிறீர்கள் என்று தங்கமயில் கேட்க, அப்போது மீனா தங்கமயிலை சீண்டும் வகையில் பேசுகிறார். தங்கமயிலுக்கு அது புரியாமல் ’நான் சாப்பாடு கொண்டு செல்கிறேன்’ என்று வழக்கம் போல் கூற, வழக்கம்போல் கோமதி வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் அவர் சென்று விடுகிறார்.

இதனை அடுத்து மீனா சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கு வரும் செந்தில் அவருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள், நடுரோட்டில் இருவரும் ஒருவரை ஒருவர் ரொமான்ஸ் ஆக பார்த்துக் கொள்ளும் காட்சிகள், நம்முடைய காதல் இப்படியே ரோட்டில் தான் செல்லும் போல தெரிகிறது என்று மீனா அலுத்து கொண்டு கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


இதனை அடுத்து ராஜி மற்றும் அரசி பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு வரும் கதிர், ராஜியின் டிரஸ் குறித்து ஒன்றுமே சொல்லாமல் இருப்பது ராஜிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் கோமதி கதிரை கண்டித்து ’ஒரு டிரஸ் வாங்கி கொடுத்தாயே, அந்த டிரஸ் நன்றாக இருக்கிறது என்று ஏன் சொல்லவில்லை’ என்று கண்டிக்க அப்போதுதான் கதிருக்கு ராஜி தான் வாங்கிக் கொடுத்த டிரஸ் அணிந்திருப்பதை கவனிக்கிறார். இதனை அடுத்து ’உனக்கு இந்த டிரஸ் நன்றாக இருக்கிறது’ என்று கதிர் கூற, ராஜி வெட்கப்பட,  அரசி கேலி செய்யும் காட்சிகள் இன்றைய எபிசோடில் உள்ளது.

இதனை அடுத்து கோமதி மற்றும் ராஜி ஆகிய இருவரும் கோவிலுக்கு செல்ல, அங்கு எதிர்பாராத விதத்தில் ராஜியின் அப்பாவையும் சித்தப்பாவையும் சந்திக்கின்றனர். ராஜியின் அப்பாவும் சித்தப்பாவும் கோமதியையும், ராஜியையும் முறைக்கும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement