• Jan 19 2025

யாருடா நீங்க அப்ரசண்டிகளா.. வெளுத்து வாங்கிய மீனா-ராஜி..! பாக்கியத்தை வறுத்தெடுத்த குழலி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் காணாமல் போன மீனா மற்றும் ராஜியை கோமதி தேடும் காட்சிகள், குமரவேல் ஆட்களை மிரட்டும் மீனா மற்றும் ராஜியின் அட்ராசிட்டி காட்சிகள், அதன் பிறகு குமரவேலை எச்சரித்துவிட்டு மீனா மற்றும் ராஜி மண்டபத்துக்கு வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மீனா மற்றும் ராஜியை காணாமல் கோமதி மண்டபம் முழுவதும் தேடி வரும் நிலையில் செந்தில் மற்றும் கதிரும் தேடுகின்றனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அனைவரும் அச்சத்தில் இருக்கும் நிலையில் மீனா மற்றும் ராஜியை குமரவேலன் ஆட்கள் கயிறை அவிழ்த்து விட்டு நீங்கள் இருவரும் சென்று விடுங்கள் என்று கூற இருவரும் ஆவேசமாகின்றனர்.


 
எங்களை எதற்காக கடத்தினாய்? ஏன் கடத்தினாய்? யார் உன்னை கடத்த சொன்னது?  என்று மீனா ஆகிய இருவரும் குமரவேல் நண்பர்களை வெளுத்து வாங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமரவேல் ஆட்கள் உண்மையை கூறி விடுகின்றனர். அதன் பிறகு வெளியே வரும் மீனா, ராஜி குமரவேலை திட்டிவிட்டு, உங்களை அப்புறம் பார்த்துக்கொள்கிறோம், இப்போது எங்களுக்கு கல்யாணம் தான் முக்கியம் என்று கூறி ஒரு ஆட்டோவைப் படித்து கல்யாண மண்டபத்துக்கு வருகின்றனர்.

முன்னதாக  மீனாவையும் ராஜியையும் பாண்டியன் குடும்பத்தினர் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு வரும் பாக்கியம் ’ஓடிவந்த மருமகள் தானே, மறுபடியும் ஓடி போயிருப்பார்கள்’ என்று கிண்டலாக சொல்ல அப்போது அதிர்ச்சி அடைந்த குழலி பாக்கியத்தை வெளுத்து வாங்குகிறார். நீங்கள் இப்படி பேசக்கூடாது, நீங்கள் பேசியது தப்பு என்று கூற அதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியம் ’நான் கூறியது தப்புதான் என்று கூறிவிட்டு வெளியே செல்கிறார்.

 இந்த நிலையில் மண்டபத்துக்கு மீனா, ராஜி வரும் காட்சியுடன் இன்றைய எபிசோடு முடிவடைந்த நிலையில் அவரது குடும்பத்தினர் எங்கே போனீர்கள் என்று கேட்கும் போது அவர்கள் உண்மையை கூறுவார்களா? அல்லது கல்யாணம் தடை படக்கூடாது என்பதற்காக எதையாவது குறி சமாளிப்பார்களா? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்ப்போம்.

Advertisement

Advertisement