• Jan 19 2025

முதல்முறையாக லிப்லாக் முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்.. அட்லிக்காகவா? பணத்திற்காகவா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்ததில்லை என்ற நிலையில் முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் லிப்லாக் முத்த காட்சிகளில் நடித்திருப்பதாகவும் அதற்காக அவர் கூடுதலாக சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ’தெறி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் தற்போது உருவாகி உள்ளது. விஜய் கேரக்டரில் வருண் தவான், சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் மற்றும் எமி ஜாக்சன் கேரக்டரில் வாமிகா கபி நடித்துள்ள இந்த படம் மே 31ஆம் தேதி வெளியாக உள்ளது.  இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பாலிவுட்டில் ப்ரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சில லிப்லாக் முத்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் முதலில் இந்த காட்சியில் நடிக்க தயங்கிய கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர் பாலிவுட்டில் இதெல்லாம் சகஜம் என்று அவருக்கு இயக்குனர் எடுத்துக் கூறியதை அடுத்து அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அட்லீ தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பதால் அவருடைய தயாரிப்பு படம் என்பதால் ’பேபி ஜான்’ படத்தில் அவர் லிப்லாக் முத்தக் காட்சியில் கீர்த்தி  நடித்ததாகவும் அதற்காக அவருக்கு கூடுதலாக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர் அட்லி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி பாலிவுட்டில் முதல் படம் என்பதால் இந்த படம் வெற்றி பெற்றால் பாலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் கீர்த்தி சுரேஷ், இந்த காட்சிக்கு  ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் இதுவரை சாதாரண முத்தக் காட்சியில் கூட நடிக்காத கீர்த்தி சுரேஷ் ’பேபி ஜான்’ திரைப்படத்தில் அட்லிக்காகவும் கூடுதல் பணத்திற்காகவும் லிப்லாக் முத்த காட்சியில் நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement