• Apr 15 2026

விஜயாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த மீனா; வேலையை காட்டிய திருட்டு சாமியார்!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து முத்துவையும் மீனாவையும் வெளியே கொண்டு வருகின்றார். அதற்கு பின் அவர்கள் இருவரும், மீனா வீட்டுக்குள் மீண்டும் வர வேண்டும் என்றால் அந்த டுபாக்கூர் சாமியாரை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லுகின்றனர்.

அதற்கு பின், திருட்டு நகை விற்கும் இடத்தில் மீனாவும் முத்துவும் மறைந்து கொள்கின்றனர். அந்த நேரத்தில், சீதாவின் தாலியை திருடிச் சென்ற பொய் சாமியார் அங்கு வருகின்றார்.

அவர் இன்னும் இருவரை கூட்டி வந்து, அங்கு இருப்பவர்களை காணவில்லை என தேடுகின்றார். அந்த நேரத்தில் மீனா கையில் திரிசூலத்துடன் வந்து அவர்களை புரட்டி எடுக்கின்றார். 


அதன் பின், அவர்களிடம் இருந்த திருட்டு நகைகளில் சீதாவின் நகையை மட்டும் எடுக்கின்றார். பின்னர் வீட்டிற்கு வந்து நடந்த உண்மையை சொல்ல வேண்டும் என மிரட்டுகின்றார்.

அதன்படி, விஜயா வீட்டுக்கு வந்த மீனா, விஜயாவின் முகத்தில் கரியை பூசுகின்றார். ஆரம்பத்தில் ஜோசியரை நம்பிய விஜயா, அதன் பின் அவருடைய வாயாலேயே அனைத்து உண்மைகளையும் கேட்டு அதிர்ச்சியாகி  விடுகின்றார்.

அதற்கு பின், இதை யார் செய்ய சொன்னது எனக் கேட்டபோது, “ரோகிணிதான் செய்ய சொன்னார்” என்று கூறி அவரை சாட்டுகின்றார். மேலும், ஸ்டோர் ரூமில் வைத்து பொய் ஜோசியம் சொல்லச் சொன்னதும் ரோகிணிதான் என அனைத்தையும் போட்டு உடைக்கிறார்.. இதுவே இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement