பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி சுதாகரைப் பாத்து இந்த ரெஸ்டாரெண்டால கலியாணத்தில ஏதும் பிரச்சனை வராதா என்று கேக்கிறார். அதுக்கு சுதாகர், என்ன சம்மந்தி இப்படிக் கேக்குறீங்க என்ன பாத்தா பிஸ்னஸுக்காக பசங்களோட வாழ்க்கையில விளையாடுற மாதிரியா இருக்கு என்று கேக்கிறார். அதைக் கேட்ட கோபி அப்புடி எல்லாம் இல்ல நானும் அப்பா தானே அதுதான் ஒரு சின்ன பயம் அவளா தான் என்கிறார்.
இதனை அடுத்து சுதாகர் நாங்க ஒரே குடும்பம் ஆகப்போறோம் அப்படி இருக்கும் போது நான் உங்கள ஏமாத்துவன என்று கோபியைப் பாத்துக் கேக்கிறார். மேலும் கலியாணத்தையும் பிஸ்னஸையும் போட்டுக் குழப்பிக்க வேணாம் என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து இனியாவ எல்லாரும் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்கு ரெடி பண்ணுறார்கள்.
அதைப் பார்த்த எழில் பிரின்சஸ் மாதிரி இருக்க என்று சொல்லுறார். அதுக்கு இனியா எனக்கு ரொம்பவே கவலையா இருக்கு என்று சொல்லுறார். மேலும் ரெஸ்டாரெண்ட இவங்க கேட்டது ரொம்பவே தப்பு என்று சொல்லுறார். அதைக் கேட்ட அமிர்தா அந்தப் பிரச்சனயெல்லாம் நாங்க பாத்துக்கிறம் நீ சந்தோசமா இரு என்று சொல்லுறார்.
இதனை அடுத்து கோபி பாக்கியாவப் பாத்து இனியாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கோணும் என்று தான் இந்தக் கலியாணத்த ரெடி பண்ணேன் என்று சொல்லுறார். மேலும் சுதாகர் சொல்லுறத நினைத்து நீ தேவையில்லாம குழப்பாதா என்கிறார். அதைத் தொடர்ந்து சுதாகர் மண்டபத்திற்கு வந்து பாக்கியாவப் பாத்து ரெஸ்டாரெண்டையும் இனியாவோட வாழ்க்கையையும் கொஞ்சம் ஜோசிக்கச் சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா நாங்க அக்ரிமெண்டில சைன் வைக்கலாம் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!