• Apr 28 2024

ஒரிஜினல் பீஸே வந்திடுச்சு, இது என்ன தாண்டவம் ஆடப்போகுதோ, சந்திரமுகி 2 திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் ரிலீஸ்

stella / 7 months ago

Advertisement

Listen News!


சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் ராஜாவாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடித்துள்ளார்.

 இந்த படத்தில் லாரன்ஸ் கமிட் ஆன போதே ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.சந்திரமுகி 2 படத்தின் வேலைகள் ஓராண்டிற்கும் மேலாக நடைப்பெற்று வந்தது. படத்தில் சிஜி எஃபெக்ட்ஸ் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அப்போது படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் சிஜி எஃபெக்ட்ஸ் பணிகள் முடிவடையாததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் 28ந் தேதி படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement