தமிழ் சினிமாவில் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.
தற்கால இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், அடுத்தடுத்து அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.
இப்போது தமிழை தாண்டி தெலுங்கு படங்களுக்கு கூட இசையமைக்க தொடங்கி இருக்கிறார். அண்மையில் அனிருத் டுபாயில் இசை கச்சேரிகள் நடத்தியிருந்தார். அந்த ஷோ நல்ல ஹிட்டடித்து.
இதை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை சந்தோசப்படுத்த ஒவ்வொரு நாடாக சென்று மியூசிக் கான்செர்ட் நடத்தி வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் இவர் லண்டனில் கலந்து கொண்ட கான்செர்ட் களைகட்டியது.
இந்த நிலையில், குறித்த மேடையில் அனிருத் பாடிக்கொண்டிருக்கும் போது ரசிகர்கள் அவர் மீது பொருட்களை தூக்கி வீசி எறிந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
இவ்வாறு ரசிகர்கள் வீசும் பொருட்களை கையில் பிடித்து கூலாக இருந்துள்ளார். ஆனாலும், வீடியோவை பார்த்த அனிருத்தின் தீவிர ரசிகர்கள் இதனை வன்மையாக கண்டித்து வருகிறார்கள்.
We strongly condemn this kind of behaviour from some audience who thinks this is okay!
Throwing stuff on artists while they are performing on stage is neither fun nor safe.Just because they take it lightly & not make a scene doesn't mean it's acceptable! #HukumWorldTour pic.twitter.com/2tvaY4eAqG
Listen News!