தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அனுஜா. இவர் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அத்துடன் மதுரை சம்பவம், நகரம், நண்பன் போன்ற படங்களிலும் துணை வேடங்களில் நடித்திருந்தார். படவாய்ப்புகள் குறைந்து போக பிக்பாஸில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது இவர் குறித்த சுவாரசியமான விடயம் ஒன்று வெளிவந்துள்ளது .அது என்னவெனில் ரசிகர்கள் இவரை ஆண்டியாக இருக்கிறீர்களே என ட்ரோல் செய்தமை குறித்து தனது கருத்தை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். அது என்னவெனில் எனக்கு வழங்கப்படும் பாத்திரம், ஸ்கிரிப்ட் ஆகியவற்றிக்கு ஏற்றாற் போல் நான் நடிக்க வேண்டிய தேவையுள்ளது.
ஸ்கிரிப்டில் ஒரு குடும்ப பெண்ணாக நடிக்க வேண்டிய தேவை வந்தால் நான் அதற்கு ஏற்றாற்போல் சேலை அணிந்து ஆண்டியாக நடிப்பேன் எனவும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றார்போல் நாயகியாக, ஆண்டியாக, குழந்தையாக கூட என்னால் நடிக்க முடியும் எனவும், நான் இப்பொழுது ஜீன்ஸ் அணிந்து இருப்பது போல் பிகினி, சேலை, சல்வார் என எதையும் என்னால் அணிய முடியும் எனவும் கருத்து வெளியிட்டார்
அதுமட்டுமல்லாது, ரசிகர்கள் குறித்து தான் நினைத்தது தப்பு எனவும் நீங்கள் என்னை ஆண்டி என ட்ரோல் செய்வதால் நான் உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
நான் எப்பவுமே ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ற மாதிரியே நடிப்பவர். ஆகவே நான் கதாநாயகியாகவும் ஆண்டி ஆகவும் என்னால் நடிக்க முடியும் ஏனெனில் நான் ஒரு நடிகை என தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு அதிரடியாக தனது பதிலை வெளியிட்டுள்ளார்.
Listen News!