தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அடையாளமாக காணப்படுபவர் தான் நடிகர் மம்மூட்டி. இவர் உலக அளவில் அறியப்படும் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றில் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் நடித்தார். இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார் மம்மூட்டி. அவருடைய 73 ஆவது பிறந்தநாளை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்திய சினிமா நடிகனாக புகழ்பெற்ற மம்மூட்டி மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்துக் கொண்டுள்ளார் .1979 ஆம் ஆண்டு வெளியான வில்கானுண்டு சொப்னங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதுவரை சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும், மாநில அளவில் 20 க்கும் மேல் தடவையையும் பெற்றுள்ளார் மம்மூட்டி. அத்துடன் இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் தனது பெயரில் தன்னார்வ நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றார். அண்மையில் இடம்பெற்ற வயநாட்டு நிலைச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருந்தார்.
அத்துடன் மம்மூட்டி காழ்ச்சப்பாடு என்ற புத்தகத்தையும் எழுதி உள்ளார். அதில் தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதியுள்ளாராம். இந்த புத்தகம் தமிழில் மூன்றாம் பிறை வாழ்னுபவங்கள் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் 73 வது பிறந்த நாளை கொண்டாடும் மம்மூட்டியின் சொத்து மதிப்பு பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ஆண்டுக்கு சுமார் 50 கோடி வருமானம் மம்மூட்டிக்கு கிடைப்பதாக கூறப்படுகின்றது. அது இவர் சினிமாவில் நடிப்பதன் மூலமும் ஏற்கனவே முதலீடு செய்தவற்றிலிருந்தும் வருகின்றதாம். மேலும் இவருக்கு கொச்சியில் பங்களா ஒன்று உள்ளது. அதன் சொத்து மதிப்பு 5 கோடி ரூபாய். இவரிடத்தில் 2. 55 கோடி முதல் 4 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் உள்ளனவாம்.
அதேபோல் ரூபாய் 1.64 கோடியில் இருந்து ரூபாய் 1.84 கோடி மதிப்பிற்கு ஆல்ட்ரேசன் செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரும் உள்ளது. அத்துடன் சுமார் 20க்கும் குறையாமல் இவரிடத்தில் கார்கள் உள்ளதாம். அதன்படி இவருக்கு வரும் ஆண்டு வருமானம் அசையும் அசையா சொத்துக்கள் முதலீடுகள் என சுமார் 370 கோடி மதிப்புக்கு சொத்து மம்மூட்டிக்கு உள்ளதாக கூறப்படுகின்றது.
Listen News!