• Jan 19 2025

,கிளிநொச்சி டைட்டிலில் ஈழத்தமிழர்களை வைத்து ஒரு படம்.. பிரபல நடிகரின் முயற்சி..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

ஈழத் தமிழர்களை வைத்து தமிழ் நடிகர் ஒருவர் கிளிநொச்சி என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் இயக்கிய நிலையில் அந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கேரக்டர் என சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்த நிழல்கள் ரவி. இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு ’நிழல்கள்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நிலையில் அதன் பிறகு பல படங்களில் குணச்சித்திர கேரக்டர், நகைச்சுவை கேரக்டர் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என சுமார் 500 படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் கூட ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஈழத் தமிழர்களை வைத்து ’கிளிநொச்சி’ என்ற டைட்டிலில் ஒரு படத்தை நிழல்கள் ரவி இயக்கி உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் அவரது திரையுலக நண்பர்கள் ஆன சத்யராஜ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement