• Mar 31 2025

இன்னும் ஹனிமூன் கூட போகல.. அதற்குள் கால்ஷீட் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங் ..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரை சமீபத்தில் திருமணம் செய்த நிலையில் இன்னும் ஹனிமூன் கூட போகாத நிலையில் அவர் அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் நடிகைகளின் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங் கடந்த 21-ஆம் தேதி காதலர் ஜாக்கி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி கூட தனது சமூக வலைதளத்தில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பது தெரிந்தது.


இந்த நிலையில் தற்போதுஇந்தியன் 2’ மற்றும் ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வரும் ரகுல் ப்ரித்திசிங் அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருவதாக தெரிகிறது. பொதுவாக நடிகைகள் திருமணம் ஆகிவிட்டால் திரை உலகில் இருந்து விலகிவிடுவார்கள், அதன்பின் ஒரு சில வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் வருவார்கள்.

ஆனால் ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து நடிக்க தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அவரது கணவர் ஜாக்கி கூறியதாகவும் அதனால் ஹனிமூன் கூட ஒத்தி வைத்துவிட்டு தெலுங்கு பட வாய்ப்புகளை அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனக்கு நெருக்கமானவர்களிடம்என் கணவர் மாதிரி யாரும் இல்லை என்றும் அவர் மிகவும் நல்லவர் என்றும் என் மனதை முழுதாக புரிந்து வைத்துள்ளார் என்றும் அவரைப் பற்றி புகழ்ந்து வருகிறார்.

கமல்ஹாசனுடன் ரகுல் ப்ரீத் சிங்  நடித்தஇந்தியன் 2’ வரும் மே மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அதனை அடுத்து அவர் நடித்த ஹிந்தி படமும் வெளியாக உள்ளது. மொத்தத்தில் திருமணத்திற்கு பின்னரும் ரகுல் ப்ரித்திசிங் திரையுலகில் பிஸியாக இருப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement