• May 19 2024

நடிகர் ஆர்யாவின் கேப்டன் படத்தின் ட்ரெய்லர் குறித்து வெளியாகிய புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் சார்ப்பாட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்பர் தான் ஆர்யா. பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகிய இப்படம் வசூல் ரீதியாகவும் அள்ளிக்குவித்ததோடு நல்ல விமர்சனத்தையும் பெற்றது. 

இதனால் இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.அந்த நிலையில் ஆர்யா தற்பொழுது கேப்டன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார் .

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் இப்படத்தில் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி இந்த படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 22ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 


இதனையடுத்து ஆர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தின் ட்ரெய்லரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .இப்படத்தில் ஆர்யாவுடன், சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி,  , காவ்யா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். 

மதன் கார்க்கி பாடல்களில், யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement