• May 20 2024

ஜிபி முத்துவை வைத்து நிகழ்ச்சியை ஓட்டும் விஜய் டீவி... உண்மையைக் கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பமாகி பரபரப்பிற்கு பஞ்சமில்லாமலும், நகைச்சுவைக்கு குறைவில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

இதில் அனைவரினதும் மனம் கவர்ந்த போட்டியாளராக ஜிபி முத்து இருந்து வருகிறார். அவர் பேசும் விதமும், வெகுளித்தனமும் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்துப்போனதால், அவருக்கு ஆர்மியை தொடங்கி அவரின் வீடியோக்களை டிராண்டாக்கி வருகின்றனர்.


இந்நிலையில் நேற்றைய தினம், மற்றும் இன்றைய தினங்களில் வெளியாகியுள்ள ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் "பாவம் நம்மவர்" என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதாவது கடந்த வாரம் ஆரம்பமாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமல் கலந்து கொண்டு பேசினார். அதில், ஜிபி முத்துவிடம் மீண்டும் ஆதாம் பற்றி பேசினார். "ஜிபி முத்து சார் பாதாம் தெரிகிறது ஆதாம் தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே" என்றார். இதற்கு ஜிபி முத்து உடனே "அதாமா? அவரு எங்க இருக்காரு" என கேட்டு சுற்றி இருந்த அனைவரையும் சிரிக்க வைத்தார். 

கடந்தவாரம் ஜிபி முத்து "ஆதாமா அது யாரு" எனக் கேட்டது ட்ரெண்டான நிலையில், மீண்டும் அதை வைரலாக்க விஜய் டீவி இப்படி ஒரு ஸ்கிரிப்டை தயாரித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில்,பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவிலும் ஜிபி முத்து தான் பிரதானமாக இருக்கிறார். அதாவது ஜிபி முத்து ஆரம்பத்தில் இருந்து கேட்டுவந்த முருங்கைக்காய் அவருக்கு பரிசாக கொடுக்கப்படுகிறது.

மேலும், ஜிபி முத்துக்கு பிடித்த கதாநாயகி யார் என கேட்க நயன்தாரா, சிம்ரன் பிடிக்கும் என்கிறார். அடுத்ததாக, பிக்பாஸ் வீட்டில் இருக்கும் யாருடன் ஹீரோயினா நடிக்க ஆசை என கேட்க முழிக்கிறார் ஜிபி முத்து.

இப் ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர், "ஜிபி முத்துவை மையப்படுத்தி தான் சீசன் 6 என்பதை விஜய் தொலைக்காட்சி நன்றாக புரிந்து கொண்டது...லீக் ஆட்டங்களில் தோற்று இறுதிசுற்றுக்கான தகுதியை CSK அணி இழந்தால் எப்படி ஆட்டத்தின் விறுவிறுப்பு குறையுமோ அதுபோல ஜிபி முத்து இருக்கும் வரை குறைவிருக்காது" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


அதுமட்டுமல்லாது மற்றொரு இணையவாசி "டேய்... எங்க தலைவனா வைச்சு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியே ஓடிடு இருக்காங்கா.. இதனால், அவரையே வின்னராக்கிடுங்க... எங்க தலயை எதும் சொல்லகூடாதுனு கமலிடம் சொல்லுங்க" எனவும் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement