• May 09 2024

அஜித்துடன் நடிக்க மறுத்த நயன்தாரா- வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய நடிகை சதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பல இயக்குநர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் பல கமர்ஷியல் படங்களைக் கொடுத்து பிரபல்யமானவர் தான் இயக்குநர் பேரரசு. இவர் விஜய், அஜித் எனப் பல நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியுள்ளார். அவை ஹிட்டும் கொடுத்திருக்கின்றன.

அந்த வகையில் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதேபோல் அஜித்தை வைத்து திருப்பதி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை சதா நடித்து இருப்பார் லைலா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு செல்வார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டும் பெற்றது.

அண்மையில் ஒரு பேட்டியில் இப்படம் குறித்து பேசும்போது பேரரசு, படத்தில் நாயகியாக சதா நடித்துள்ளார். ஆனால் முதலில் தேர்வானது நடிகை நயன்தாரா தான். அப்போது அவர் தெலுங்கு படம் ஒன்றில் பிஸியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போனது என்று கூறியுள்ளார்.

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement