• May 09 2024

'இது தான் உண்மையான வளர்ச்சி'- தனுஷை நினைத்து பெருமைப்படும் அவரது ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள முக்கிய திரைப்படம் தான் “தி கிரே மேன்”. இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அத்தோடு இந்தத் திரைப்படம் வருகின்ற ஜூலை 22ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் வெளியான ட்ரெய்லரில் தனுஷை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம் தான் . காரணம் தனுஷ் நடிக்க வந்த ஆரம்பத்தில் அவருக்கு அவ்வளவாக ஆங்கிலம் பேச வராது ஹோட்டலுக்கு சென்ற இடத்தில் பில்லை ஆங்கிலத்தில் செக் என்று சொல்வார்கள் என்பது தெரியாமல் நண்பர்கள் முன்பு அசிங்கப்பட்டார் தனுஷ்.

அதையும் ஒரு சவாலாக ஏற்று ஆங்கிலம் கற்று தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இது தான் உண்மையான வளர்ச்சி என தனுஷ் ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள். அதே சமயம், தனுஷை கட்டாயப்படுத்தி நடிக்க அழைத்து வந்த அவரின் அப்பா கஸ்தூரிராஜாவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement