• May 22 2024

சர்தார் திரைப்பட உரிமையைக் கைப் பற்றிய பிரபல தொலைக்காட்சி - முதலில் ஓடிடியில் தான் படம் ரிலீஸ் ஆகுமாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் முக்கிய நடிகராக விளங்குபவர் நடிகர் கார்த்தி. இவர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரகாஷ் ராஜும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.

இன்று கார்த்தி பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை முன்னணி நிறுவனமான கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. முன்னதாக ஆஹா ஓடிடி இந்த படத்தை வாங்கி ரிலீஸூக்குப் பின் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement