• May 14 2025

நயன்தாராவை போட்டு இந்த அடி அடிக்கிறானே பையன்.. அன்னையர் தின க்யூட் வீடியோ..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவின் அன்னையர் தின ஸ்பெஷல் வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவில் நயன்தாராவின் தலையில் அவரது மகன் செல்லமாக அடிப்பது உள்பட பல க்யூட்டான காட்சிகள் உள்ளன.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்பதும், இந்த குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்த விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் அவரது இரண்டு மகன்களும் செல்லமாக விளையாடும் காட்சிகள், நயன்தாராவின் தலையில் செல்லமாக அடிக்கும் காட்சிகள், முத்தம் கொடுக்கும் காட்சிகள், ஓடி விளையாடும் காட்சிகள் ஆகிய கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஒரு தாய்க்கு 10 மதிப்பெண்களுக்கு எவ்வளவு போடலாம் என்று பார்த்தால் உங்களுக்கு 99 மதிப்பெண்கள் போடலாம், ஒரு அன்னையாக நீங்கள் மிகச் சிறந்த அளவில் மாறிவிட்டீர்கள் என்று நயன்தாராவுக்கு அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுக்கு ’எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் ஒரு அன்னை என்று வந்துவிட்டால் குழந்தையோடு குழந்தையாக கொஞ்சி விளையாடும் காட்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement