• May 20 2024

'ஜவான்' பட வெற்றிக்காக திருப்பதிக்குப் போன நயன்தாரா, ஷாருக்கான்... தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்துள்ளார். அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தினுடைய டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் இருந்து சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.

அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. இந்த நிலையில் ஜவான் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நேற்றிரவு திருப்பதிக்கு சென்ற ஷாருக்கான், நயன் தாரா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 


நடிகர் ஷாருக்கான், அவர் மகள் சுஹானா மற்றும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து இன்று காலை சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் திருப்பதிக்கு முதல் முறை சென்றுள்ள ஷாருக்கான் வேஷ்டி, சட்டை அணிந்து சாமி தரிசனம் செய்துள்ளமை ரசிகர்களால் பாராட்டப்படுகின்றது. அத்தோடு இவர்களுடன் ஷாருக்கான் மகள் சுஹானா மற்றும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.


Advertisement

Advertisement