• Jan 19 2025

72 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா? 10 கோடி சம்பளத்திற்காக இப்படியா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

10 கோடி ரூபாய் சம்பளம் என்பதற்காக நயன்தாரா 72 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா என்பதும் அவருக்கு ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வரும் நயன்தாரா தற்போது கூட பிஸியாக இருக்கிறார் என்பதும் அவரது நடிப்பில் இரண்டு படங்கள் முடிந்துவிட்ட நிலையில் மேலும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகி ஆக நடித்த நயன்தாரா ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடித்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மலையாள திரைப்படங்கள் என்றால் நயன்தாரா சம்பளத்தை குறைத்துக் கொள்வார் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளம் தேவை என்று அவர் கூறிய போதிலும் தயாரிப்பாளர் அதற்கு ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவுக்கு 39 வயது என்ற நிலையில் அவர் 72 வயது மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக் கொண்டதற்கு ஒரே காரணம் 10 கோடி ரூபாய் என்று ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் தென்னிந்திய பிரபலங்களை பொறுத்தவரை கமல், ரஜினி, என்டிஆர் பாலகிருஷ்ணா, மோகன்லால், மம்முட்டி ஆகியோர் 60 முதல் 70 வயதை தொட்டவர்கள் தான் என்றும் அவர்களுக்கு ஜோடியாக நடிப்பதில் தவறில்லை என்றும் மாஸ் நடிகர்கள் என்றால் வயதை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இன்னொரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement