• Jan 19 2025

அப்பா இறந்து ஒரு வாரம் ஆயிருச்சு? எனக்கே யாரும் தகவல் சொல்லலை.. கதறி அழுத பிக்பாஸ் ஷெரின்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

எனது அப்பா இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாகவும் ஆனால் தனக்கே யாரும் தகவல் சொல்லவில்லை என்றும் பிக் பாஸ் ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் நடித்த முதல் திரைப்படம் ஆன ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷெரின். இதனை அடுத்து ’விசில்’ உட்பட சில படங்களில் நடித்த ஷெரின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் பிரபலமானார் என்பதும் தெரிந்தது.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பாக அவர் கோமாளி புகழுடன் சேர்ந்து செய்த காமெடி சூப்பராக அந்த நிகழ்ச்சியை கொண்டு சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷெரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தையின் புகைப்படத்தை பதிவு செய்து தனது தந்தை காலமாகி ஒரு வாரம் ஆகிவிட்டது என்றும் ஆனால் தற்போது தான் தனக்கு தகவல் தெரிய வந்தது என்றும் அவர் மறைந்த செய்தி கேட்டு தனது இதயம் நொறுங்கி விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

தனது தந்தையின் அன்புக்காக தான் ஏங்கியதாகவும் தனது தந்தையை தான் ரொம்பவே மிஸ் செய்வதாகவும் அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் ஷெரின் தந்தை இறந்த தகவலை கூட  அவருடைய வீட்டினர் அவருக்கு தெரிவிக்கவில்லை என்றால் அவருக்கும் அவர் வீட்டிற்கும் ஏதாவது பிரச்சனையா? என புரியாமல் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். இருப்பினும் அவர் தனது தந்தையை இழந்ததற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement