• Jun 27 2026

விஜய்யின் அடுத்த அவதாரம் கிராமத்து நாயகனா?

shali / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ரத்னகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் விஜய் தொடர்பான சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “விஜய் சாரை வேட்டி சட்டையில் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவருக்கு ஏற்ற மாதிரி ஒரு கிராமத்து கதையை தயார் செய்து வைத்திருந்தேன். அதை பார்த்துவிட்டு விஜய் சார் நேரடியாக எனக்கு மெசேஜ் செய்து, அந்த கதையை கேட்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்” என்றார்.


இதைத்தொடர்ந்து, ரத்னகுமார் விஜயை நேரில் சந்தித்து அந்தக் கதையை விவரமாக கூறியதாகவும், அந்தக் கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறினார். இது ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. விஜய் மீண்டும் ஒரு கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இதன் மூலம் உருவாகியுள்ளது.

ஆனால், அதே சமயத்தில் வாரிசு படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்ததால், விஜய் அந்த படத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக ரத்னகுமார் தெரிவித்தார். இதனால், இந்த கூட்டணி அப்போது உருவாகாமல் போய்விட்டது.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதிர்காலத்தில் இந்த கூட்டணி நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement