மலையாள திரையுலகில் சவின் எஸ்.ஏ இயக்கத்தில் உருவாகியுள்ள வாழ 2 திரைப்படம், புதிய முகங்களான ஹாஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், விநாயக் உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த 2ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 2024ஆம் ஆண்டு வெளியான ‘வாழ’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக வந்த இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் வெற்றி காரணமாக, ‘வாழ 3’ படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என இயக்குனர் அறிவித்திருப்பதும் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. புதிய கதைக்களம் மற்றும் இளம் நடிகர்கள் இணைந்த இந்த தொடர்ச்சிப் படங்கள் மலையாள சினிமாவில் ஒரு புதிய அலை உருவாக்கி வருகின்றன.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளமான எக்ஸ் (Twitter) மூலம் பதிவிட்டுள்ளார். அதில், படக்குழுவினருடன் நேரில் கலந்துரையாடியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாகவும், இப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த படத்தை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளும் சஹுகாரபதி மற்றும் அர்ச்சனா ஆகியோரையும் அவர் பாராட்டியுள்ளார். இளம் படக்குழுவின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்த ராம் சரணின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!