• May 07 2024

நயன் திருமண வீடியோவில் இவ்வளவு ருவிஸ்ட்டா-இயக்குநர் கவுதம் மேனனின் தயாரிப்பில் எப்போது ரிலீஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குநர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்ட நடிகை நயன்தாரா 7 ஆண்டுகளுக்கு மேலாக அவரை காதலித்து வந்தனர்.இந்நிலையில் ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றது.அத்தோடு மகாபலிபுரத்தில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியது.


மேலும், விக்னேஷ் சிவன் தங்களது திருமண புகைப்படங்களை திருமணம் ஆகி 1 மாதம் ஆன நிலையில் வெளியிட்டிருந்தார். நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு விஷயத்தில் இருந்து அதிரடியாக netflix பின்வாங்கிவிட்டதாக தகவல் கசிந்தது.

தங்களின் ஒப்பந்தத்தை மீறியதை சுட்டி காட்டி நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும், அதில் திருமணத்திற்கான செலவு தொகை மற்றும் திருமண வீடியோவுக்கான செலவுத்தொகையை திருப்பி தரவேண்டுமென தெரிவித்திருப்பதாக கூறப்பட்டது.

அதன் பின்னர், விக்னேஷ் சிவன் - நயன்தாரா எடுத்த கடற்கரை போட்டோஷூட் புகைப்படங்களை netflix தனது அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டது. இதனால், விரைவில் இவர்கள் திருமண ஒளிபரப்பை netflix விரைவில் செய்யவுள்ளதாகவும், பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம்.

எனினும் குறிப்பாக இந்த திருமண வீடியோவை ஒரே தொகுப்பாக வெளியிடாமல், வெப் சீரிஸ் போல், மெஹந்தி, சங்கீத், முகூர்த்தம், வரவேற்பு என தனித்தனியாக வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். எனினும் இதற்கான பணிகளை கவனிக்கும் பொறுப்பு இயக்குநர் கவுதம் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாம். இதன்மூலம் விக்கி - நயனின் திருமண வீடியோ வெகு விரைவில் ரிலீசாகும் எனத் தெரிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement