• Sep 21 2024

முக்குத்தி அம்மன் 2 லும் நயன் தானா? கன்பார்ம் பண்ணிய வேல்ஸ் பிலிம்ஸ்..! அதிரடி ப்ரோமோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் காணப்படும் ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நயன்தாரா அம்மன் கேரக்டரில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளதாகவும் அதில் நயன்தாரா அல்லது திரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில்,  வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு நயன்தாரா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


அதன்படி மூக்குத்தி அம்மன் இரண்டாவது பாகத்திலும் நயன்தாரா அம்மன் கேரக்டரில் நடிப்பது தற்போது உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதன் இயக்குனர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இதனால் ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தில் இருக்க மாட்டார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றமே குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement