• Jul 16 2025

சினிமாவில கூட இப்படி ஆடலையே.. அம்பானி வீட்டு கல்யாணத்தில் ரஜினி டான்ஸ்..அதிர்ந்த மும்பை..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் அவர் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் என்பவரை திருமணம் செய்ய இருக்கும் நிலையில், இந்த திருமண விழா நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. 1700 கோடி ரூபாய் செலவில் இந்த திருமணம் நடைபெறும் நிலையில், பல திரையுலக பிரபலங்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் உலகின் முக்கிய பிரபலங்கள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஆரம்பித்த திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உட்பட குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்த நிலையில் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ரஜினிகாந்த், திருமண விழாவில் உற்சாகமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



மணமகன் ஆனந்த் அம்பானி அருகே ரஜினி வந்தபோது திடீரென பாடல் ஒலிக்க அந்த பாடலுக்கு ஏற்றவாறு ரஜினிகாந்த் எதிர்பாராத வகையில் திடீரென நடனம் ஆடினார். ரஜினிகாந்த் நடனமாடியதை பார்த்த மற்றவர்கள் தாங்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு கைதட்டி ரசித்தனர்.

சிறிது நேரம் நடனமாடிய ரஜினியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  சினிமாவில் கூட ரஜினிகாந்த் இப்படி நடனமாடியதில்லையே என கமெண்ட் குவிந்து வருகிறது.

ரஜினிகாந்த் பொதுவாக திருமணம் உள்பட எந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் நடனம் ஆடியதில்லை என்பதுதான் இதுவரை வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால் ஆனந்த் அம்பானி திருமணத்தில் அவர் நடனமாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



Advertisement

Advertisement