• May 09 2024

நவீன்-கண்மணி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு... புகைப்படத்தை வெளியிட்டு குட் நியூஸ் சொன்ன ஜோடி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகளை தாண்டி தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தன்னுடைய அழகாலும் குறுகுறு பார்வையாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் செய்தி வாசிப்பாளரான கண்மணி.


அந்தவகையில் முதலில் ஜெயா டிவியில் தன்னுடைய நியூஸ் ரீடர் பயணத்தை தொடங்கிய கண்மணி, பின்னர் நியூஸ்18, காவிரி போன்ற பல செய்தி நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். இதனையடுத்து தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். 


பின்னர் கண்மணி கடந்த ஆண்டு, தன்னுடைய காதலரும் இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமான நடிகர் நவீனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் கண்மணி,  கர்ப்பமாக இருக்கும் தகவல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து கண்மணிக்கு மிகவும் பிரமாண்டமாக அண்மையில் வளைகாப்பு நடந்தது. இந்நிலையில் தற்போது நவீன்-கண்மணி தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த விடயத்தை புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளனர். இந்தத் தம்பதியினருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement