• Jun 04 2023

குக் வித் சோமாளியில் என்ட்ரி கொடுத்த நாகேஷ் பேரன்.. ஓடி போய் கட்டிப்பிடித்த புகழ்.. இவர்களுக்குள் இப்படியொரு உறவா?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி சீசன் 4ல் இன்று இரு புதிய போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதில் முதல் ஆளாக நாகேஷ் பேரன் கஜேஷ் வந்தார். பின் கலை இயக்குர் கிரண் என்ட்ரி கொடுத்தார்.

இதில் நாகேஷ் பேரன் உள்ளே வந்தவுடன் புகழ் ஷாக்காகிவிட்டார். ஓடிப்போய் அவரை கட்டிபிடித்துக்கொண்டார். ஏன் புகழ் மட்டுமே கஜேஷிடம் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறார் என முதலில் பலருக்கும் தெரியவில்லை.

ஆனால், அதன்பின் புகழ் அதற்கான காரணத்தை கூறினார். சினிமாவிற்கு புகழ் வருவதற்கு முன் பல மாதங்கள் கஜேஷ் தான் புகழுக்கு சாப்பாடு, உடுத்த உடை என அனைத்து விஷயங்களையும் பார்த்துக்கொண்டாராம்.

அப்படி நெருங்கிய நண்பர்களாக இருவரும் இருந்துள்ளனர். புகழ் தற்போது இப்படியிருக்க நிலையில் முக்கிய காரணங்களில் ஒருவர் கஜேஷ் என அவரே கூறியுள்ளார். இதனால் தான் கஜேஷை பார்த்தவுடன் கண்கலங்கிவிட்டார் புகழ்.


Advertisement

Advertisement

Advertisement